Monday 23 April 2018

MOONRISE KINGDOM : இது வெஸ் ஆண்டர்சனின் சமீபத்திய நலிந்த,துயரகரமான சாகசமாக உள்ளது

ஜோயன்ன லோரியர் (Joanne Laurier)

வெஸ் ஆண்டர்சன் கலை மற்றும் வாழ்க்கை குறித்த வித்தியாசமான அணுகுமுறையையும்ஆனால் சற்றே தடுமாற்றமும்கேலித்தனமும்அத்துடன் மனிதத்தன்மையும் கொண்ட ஓர் அமெரிக்க திரைப்பட இயக்குனராவார்Rushmore (1998), The Royal Tenenbaums (2001) மற்றும் The Life Aquatic with Steve Zissou (2004) ஆகிய இவரது மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சில விதத்தில் சமுதாய மற்றும் தனிமனித புறக்கணிப்பின் பல்வேறு படிவங்களை உயர்த்திக் காட்டுகின்ற கற்பனை கதை களத்தைப் பின்தொடர்கிறதுஅவரது மிக நம்பமுடியாத விளக்கங்கள் எவ்வாறிருந்த போதினும்பொதுவாக ஆண்டர்சன் அவருடைய திரைப்படங்களையும்,கதாபாத்திரங்களையும் ஒரு திடமான மற்றும் அங்கீகரிக்கும்படியான உலகத்துடன் இணைக்கிறார்


மூன்ரைஸ் கிங்டம் (MOONRISE KINGDOM)

Directed by Wes Anderson ; Screenplay by Anderson and Roman Coppola  

ஆண்டர்சனின் புதிய படைப்பான மூன்ரைஸ் கிங்டம் கட்டவிழ்ந்துவரும் தற்போதைய சமுதாயப் பேரழிவுகளுக்கு இடையில் இயக்குனர் அவரது பிடிமானத்தை மாற்ற மாட்டார் என்ற ஒரு பணிவான ஆனால் பிடிவாதமான ஒரு அறிவிப்பாக தெரிகிறதுஅநேகமாகசுற்றி வளைத்து சொல்லும் பாணியில்அந்த படம் நெருக்கடிக்கு அதன் சொந்த வெளிப்படையான விடையிறுப்பைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ள முடியும்.

எளிமையும்பெரும் அறியாமையும் இருந்த காலமென்று கருதப்பட்ட 1965இன் கதைக்களத்தில்மூன்ரைஸ் கிங்டம் படத்தின் கதைபுதிய இங்கிலாந்தின் கடற்கரைக்கு அருகில் எங்கோ இருப்பதாக நம்ப வைக்கப்படும் ஒரு தீவில் (நியூ பென்சான்ஸ்தொடங்குகிறதுதொடர்ந்து ஒரு பெரும் சூறாவளியை எதிர்பார்த்துபடத்தின் கதை விவரிப்பாளர் (பாப் பாலபன்கடுமையான தட்பவெப்ப நிலையைத் தாங்கும் உடையை உடுத்தி இருக்கிறார். (ஷேக்ஸ்பியர்ஜில்பேர்ட் மற்றும் சுலிவான் ஐ போதியளவிற்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது)

12 வயது நிரம்பிய சுசி பிஷப் (காரா ஹேவார்ட்மற்றும் சேம் ஷாகஸ்கி (ஜேர்ட் கில்மேன்ஆகியோர் தான் இத்திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள்முதலாமவர் அவர் பெற்றோர் வால்ட் மற்றும் லாராவுடன் (பில் முர்ரே மற்றும் ஃபிரான்ஸ் மெக்டார்மண்ட்தீவின் ஓரத்தில் வசிக்கிறாள்அதேவேளைஓர் அனாதையான சேம்ஒரு காப்பகத்தால் நிராகரிக்கப்படுகிறான்இந்த இரு சிறுவர்களும் வித்தியாசமானவர்கள்எல்லாவற்றிற்கும் மேலாகஇருவரும் அறிவுபூர்வமானவர்கள்ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் கண்டு கொண்ட இருவரும்இப்போது ஆத்ம நண்பர்களாகஅமைதியுடனும் புரிதலுடனும் வசிக்க முடிகின்றவாறுஅந்த தீவின் ஒரு  ஒதுக்குப்புறமான பகுதிக்கு தப்பிச் செல்வதற்கான திட்டம் தீட்டி வருகின்றனர்.

சேமின் வாழ்க்கை திறமைகள் உள்ளூர் சாரணர் குழுவால் பட்டை தீட்டப்பட்டிருக்கின்றனமுழங்கால் வரை உறையணிந்த அவனுடைய தலைவரான எட்வர்ட் நோர்டான் ஓர் உயரமானவராகஅவரது பொறுப்புகளில் பழைய காலத்தவராக இருக்கிறார்அவர்களின் காட்டு பயணத்தின் போதுசேம் அடிப்படையான யுக்திகளையும்கருவிகளைக் கையாள்வதைக் குறித்து பகிர்ந்து கொள்கிறான்.அதேவேளையில் சுஜி கலாச்சாரம் மற்றும் கவர்ச்சியை அளிக்கிறாள்பார்வைக்கு 1960களின் விளம்பர அழகி போன்று தீவிரமாக அலங்கரிக்கப்பட்டுகலங்கடிக்கும் ஏக்கப்பார்வையோடு அவள் அவளது நூலக புத்தகங்களை ஒரு கனமான பெட்டியிலும்அவளது பூனையை ஒரு மிருதுவான கூடையிலும் ஏந்தி சுமக்கிறாள்அவளும் அவளது உடன்பிறப்புகளும்ஓர் இசைக்குழுவின் பல்வேறு பகுதிகளின் திறமைகளை விளக்குவதில் ஒரு பகுதியாக இருக்கும் பெஞ்சமின் பிரிட்டெனின் The Young Person’s Guide to the Orchestra (1946)ஆல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சேம் மற்றும் சுசி காணப்போவதால் தூண்டப்படுகின்ற நெருக்கடியானது பாதிரியாரின் மகிழ்ச்சியற்ற திருமணம்தலைமை பொலிஸ் அதிகாரியின் (ப்ரூஸ் வில்லிஸ்தனிமை மற்றும் சாரணர் படை பயிற்சியாளரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டிருப்பது என அந்த சமூகத்தின் நடுத்தர வயதினரின் வளமற்ற வாழ்க்கையின் போலித்திரையைக் கிழித்தெறிகிறதுஅடர்  நீல உடையும் தொப்பியும் அணிந்த சமூக சேவகியாகடில்டா ஸ்விண்டன் (நடிகர்கள் பட்டியலில் இருக்கும் அந்த கதாபாத்திரத்தின் பெயர்கீழ்படியாத இளையோர்களுக்கு மின்-அதிர்ச்சி சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பாளராக இருக்கிறார்.

மூன்ரைஸ் கிங்டம் ஒரு வித்தியாசமான நோர்மன் ரொக்வெல் ஓவியங்களின் தோற்றத்தைக் கொண்டுள்ளதுஅது கடந்து போன சகாப்தங்களின் ஏக்கம் தோய்ந்த பழைய நினைவுகளினூடாக வருகிறதுஅதன் படங்கள் வலுவாக வண்ணம் தீட்டப்பட்டவையாககூர்மையாக வரையப்பட்டவையாக இருக்கின்றனஒவ்வொரு காட்சியும் மிக நுட்பமாக சுய-நனவுடன் செய்யப்பட்டதாக இருக்கிறதுஒரு முடிவில்லாத பொம்மை வீடு கிடத்தப்பட்டதைப் போன்று ஒரு பாதிரியார் வீட்டின் பரந்த காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறதுசுஜி "அசுர சக்தியைக்கட்டவிழ்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் பைனாக்குலர் மூலமாக உலகைப் பார்த்து கொண்டுகுடும்பத்தின் உற்சாகமற்ற வழக்கமான வேலைகளில் ஈடுபடுகிறாள்அவள் அவளது உடன்பிறப்புகளுடன் முரண்பட்டு இருப்பதுடன்,ஒவ்வொருவரையும் ஆலோசகராககுறிப்பிடுகின்ற மற்றும் வெவ்வேறு படுக்கைகளில் படுக்கின்ற அவளுடைய வழக்கறிஞர் பெற்றோர்களாலும் அவள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறாள்ஆண்டர்சன் வெறும் பார்வையாளராக இருக்கிறார்ஆனால் தனி நடத்தை சார்ந்த உற்சாகங்களும் வெகு வேகமாக கடந்து செல்கின்றன.

பொதுவாகஇயக்குனர் திறமை வாய்ந்த வளர்ந்த நடிகர்களின் கதாபாத்திரத்தை இதில் குறைவாகப் பயன்படுத்துகிறார்குறிப்பாக வழக்கமாக முர்ரேஒரு ஆண்டர்சனைஅவருக்கோ அல்லது மெக் டார்மண்டுக்கோ படத்தில் அதிகம் நடிப்பதற்கில்லைசாரணர் படை தலைவர் வார்டாக நோர்டான் அவரது இளமை துடிப்பான கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்மேலும் வில்லிஸின் நடிப்பு இரக்கப்படும் அளவிற்கு குறைவாக காட்டப்படுகிறதுஸ்விண்டன் அவரது இராணுவ சம்பந்தப்பட்ட நையாண்டி நடிப்பில் வேடிக்கையாக இருக்கிறார்.

புது வரவுகளான கில்மேனும்ஹேவார்டும் சிறப்பாக இயக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்அவர்களின் பரஸ்பர உரையாடலின் தருணங்கள் படத்தின் சில சிறந்த காட்சிகளாக உள்ளனஎவ்வாறிருப்பினும்இத்திரைப்படத்தின் இறுதி அத்தியாயங்களில்இருவரின் தொடர்ச்சியும் கேலிக்கூத்தாகவும்,பயனற்ற விதத்தில் முடமாக்கப்பட்டதைப் போன்றும் மாறிவிடுகிறதுகௌசின் பென்னாக வரும் ஜான் ஸ்கிவார்ட்ஸ்மேன் மற்றும் கமாண்டர் பியர்ஸாக வரும் ஹார்வி கீட்டல் ஆகியோரின் நடிப்பு படத்தில் வீணாக்கப்பட்டுள்ளதுஅவர்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் குறித்தே பார்வையாளர்கள் வியக்க வேண்டியதிருக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில்ஆண்டர்சன் அவரது நடுத்தர வயது கதாப்பாத்திரங்களைப் படைப்பதிலும்முழுமைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவில்லையென்று தெரிகிறதுமுதிர்பருவம் மனம் கடினமாகி கல்லாகி போகும்படிக்கு செய்கிறது என்பன போன்ற (அதுவும் குறிப்பாக ஸ்வின்டனின் "சமூக சேவைகள்விஷயத்தில்,அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கிறதுபடத்தின் பிரதான கருத்துக்களில் ஏதாவது ஒன்றாவதுஇயக்குனரின் ஆர்வ எல்லைக்கு வெளியில் அமைந்த அவற்றைக் குறித்த ஒரு தேடலை நிறுத்துகிறதாபூமியில் நடுத்தர வயதினர் வாழ்க்கை நடவடிக்கைகளின் உள்ளடக்கத்தில்நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோஒரு முக்கிய பங்கு வகிக்து வருகின்றனர் என்கின்ற நிலையில்இது பெரிதும் மட்டுப்படுத்தப்பட்ட விதத்திலும்ஒருவர் தயங்காமல் துணிந்து சொல்வதானால்குழந்தைத்தனமான கலைத்துவ முடிவாகவும் காணப்படுகிறது.

எல்லாம் இருந்தும் மூன்ரைஸ் கிங்டமில் ஒரு மங்கலான ஊசலாட்ட உணர்வு குறுக்கிடுகிறதுவிவரிப்பாளர் இருப்பதும்வர்ணனைகளும் ஏதோ வீணாகிக் கொண்டிருப்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி வருகின்றனஅதன் பின்னர்பிரெட்டெனின் 1957 இசை நிகழ்ச்சியான Noye’s Fludde (Noah’s Flood) நிகழ்ச்சி (இது பூமியிலிருக்கும் பெரும்பாலான உயிர்களுக்கு பெரும் அழிவையும்உலகின் அழிவையும் உள்ளடக்கிய ஒரு படைப்புஅந்நகரத்தில் நடத்தப்படும் காட்சிகளும் அங்கே இருக்கின்றனசிலவற்றில் பெரிதாகவும்அதிகம் நெருடுவதாகவும் இருக்கும் இந்த பல்வேறு குறிப்புகள் நினைவில் நிற்பதாக இல்லை என்பதோடு ஒட்டுமொத்த பலன்கள் குறைவாகவே உள்ளன.

மூன்ரைஸ் கிங்டம் ஒரு திருப்திகரமான படைப்பு என்று அதிகம் சொல்வதற்கில்லைஆனால் கவனத்தோடு இருந்தாலும் கூடஅது நம்முடைய இன்றைய எதார்த்தத்திற்கு எவ்விதமான நேரடியான அல்லது குறிப்பிடத்தக்க விதமான பிரதிபலிப்பைத் தாங்கி நிற்க பிடிவாதமாக மறுக்கிறதுஇதுபோன்றவொரு மறுப்பிலிருந்துஏறத்தாழ ஒரு வேலைதிட்டமாகஒரு நல்லொழுக்கத்தை உருவாக்குவது பெரும்பாலும் எப்போதும் வெகு குறைந்த ஆர்வத்தைத் தூண்டும் வெளிப்பாட்டையே உருவாக்குகிறது.

ஆண்டர்சனின் அதிநவீன-புத்திசாலித்தனத்திற்கும்அவரின் இயலாமை அல்லது ஆர்வமின்மைக்கும்வேறு வார்த்தைகளில் கூறுவதானால்நிகழ்காலத்தில் வாழ்வதன் மீது அதன் பலன்களை வரைந்து காட்ட முடியுமாசமகாலத்திய வாழ்க்கை மிகவும் வலி நிறைந்திருப்பதாக அவர் காண்கிறார் என்று அர்த்தமா?

அறியாமைக்கு குறைவில்லாத அவருடைய சமீபத்திய சில படைப்புகளில் இருப்பதைக் காணும் போதுஒரு வெகுளித்தனமானவர் என்ற அவர் மீதிருக்கும் ஒருவரின் பார்வை சிறிது பாதிக்கப்படுகிறது என்று தான் கூற வேண்டும். 2007ல், AT&Tக்காக ஆண்டர்சன் பல விளம்பர படங்களை மேற்பார்வையிட்டு செய்தளித்தார்அவற்றில் ஒன்று பல லெபனிய-அமெரிக்க குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்டதுபீரெட் நகரத்தில் குண்டு வீசப்பட்டு வரும் போது,அந்நகரின் ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் புகைப்பட இதழாளர்கள் சுட்டு கொல்லப்படுவதாக அந்த விளம்பரப்படம் சித்தரித்தது. American Express மற்றும் ஜப்பான் கைப்பேசி நிறுவனமான SoftBank ஆகியவற்றிற்கும் அவர் விளம்பர படங்களை இயக்கி உள்ளார்.

ஒரு பரந்த உலக கண்ணோட்டத்துடன் மனிதயின சிக்கல்கள் மற்றும் பலவீனங்கள் மீது அவர் அவரது உணர்வுகளை ஒருங்கிணைத்தால்அதில் குறுக்கிடும் விஷயங்களையும் பெரும்பாலும் ஆண்டர்சன் சந்திக்க வேண்டியதிருக்கும்.


No comments:

Post a Comment