Friday 27 April 2018

INSIDE JOB



Inside Job

அமெரிக்க ஆவணப்பட இயக்குனரான சார்லஸ் பெர்குசனால் (No End In Sight) இயக்கப்பட்டிருக்கும் Inside Job திரைப்படம் மதிப்புடைய ஒன்றாக இருக்கிறது. இது 2008 செப்டம்பரில் நிகழ்ந்த உலகளாவிய நிதியியல் பொறிவை விவரமாக கையாள்கிறது. இருபது ட்ரில்லியன் டாலருக்கும் மேலாக மதிப்பிடுவதுடன்உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பிச்சைக்காரர்களின் நிலைமைக்கு ஆளாக்கியது என்று கூறுவதுடன், “நீண்ட காலத்திற்கு அமெரிக்க மக்கள் இதற்கு செலவிட வேண்டியதிருக்கும்” என்று டொரொண்டோவில் நடந்த திரைப்பட கேள்வி-பதில் நிகழ்வில் இயக்குனர் தெரிவித்தார்.



Glenn Hubbard interviewed in Inside Job

மட் டேமனால் (Matt Damon) நடிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் ஆவணத்தொகுப்பின் ஆதாரங்களையும்படவிளக்கங்களையும் மற்றும் புள்ளிவிபர விளக்கப்படங்களையும்அத்துடன் டஜன் கணக்கான பிரபலங்களின் கருத்துக்களையும் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களாக இருக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள்வெளிப்படுத்தி காட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதிலிருந்து விரோதம் காட்டுவது வரையிலான பிரிவில் அடங்கி உள்ளார்கள். குற்றம்மிக்க நிதியியல் துறை விரிவடைவதில் முந்தைய புஷ் நிர்வாகம் எந்தளவிற்கு பொறுப்பு வகித்ததோ அதே அளவிற்கு ஒபாமாவின் வெள்ளை மாளிகையும் பொறுப்பு வகிக்கிறது என்று இது வாதிடுகிறது.

1980களில் இருந்து நெறிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது தான்பிரச்சினையை இந்தளவிற்குச் சிக்கலுக்குள் கொண்டு வந்துநெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றது என்றும்ஆனால் நிதியியல் துறையில் பெருத்த செல்வாக்கின் காரணமாகவும்செல்வசெழிப்பின் காரணமாகவும் குறைந்தளவு எண்ணிக்கையிலான மக்களே இதனால் பாதிக்கப்பட நேர்ந்தது என்றும் Inside Job படத்தின் தயாரிப்பு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. 2008 நெருக்கடியின் விஷயத்தில், “ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுத்திய மோசடி நடந்திருந்தாலும்ஒருவர் கூட சிறைக்கு அனுப்பப்படவில்லை.

நிதியியல் உயர்தட்டு மற்றும் அவர்களின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி முகவர்களின் சமூகரீதியிலான பேரழிவு செயல்பாடுகளை மூடிமறைக்க நுழைக்கப்பட்டிருந்த பெரும் விஷயங்கள், “எல்லாவற்றிற்கும் சிகரமாக சரியான நெறிமுறைகளும்மக்களைச் சிறப்பாக திருத்தும் முறைகளும் இருந்திருந்தால்நிதியியல் பொறிவு முற்றிலும் தகர்த்திருக்கக்கூடியதாகும்” என்று பெர்குசனைத் தீர்மானிக்க இட்டுச் சென்றிருக்கிறது. நம்முடைய நிதியியல் அமைப்புமுறையில் நேர்மையையும்ஸ்திரப்பாட்டையும் மீண்டும் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் அதை அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் யாரும் மறுக்க முடியாது” என்று பெர்குசன் குறிப்பிடுகிறார்.

இது பொறிவின் புறநிலையைவரலாற்று மற்றும் அமைப்புரீதியிலான பாத்திரத்தை ஒருவரின் பார்வையில் இருந்து ஒன்றும் நிகழாதது போன்று காட்டுவதாகும். இதுபோன்ற கருத்து வெளியிடுவோர்இந்த வியப்பார்ந்த மாற்றங்கள் எவ்வாறுஏன் நிகழ்ந்தது என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வதில்லை. அமெரிக்க ஆளும் மேற்தட்டு திடீரென்று அதன் நன்னெறிகளை இழந்துவிட்டதாமக்களின் ஒழுக்கம் ஏன் இந்தளவிற்கு வீழ்ச்சியுற்றதுஒரு நெருக்கடியை நோக்கி உந்தித் தள்ளப்பட்ட அமைப்புமுறைக்கு திறந்துவிடப்பட்டிருந்த கூர்மையான வாய்ப்புகளோடு அதற்கு எந்த தொடர்பும் இல்லையா?

பெருவணிக அமெரிக்காவின் ஊழல் மற்றும் அதற்கு அடிமைப்பட்டு கிடந்த தன்மையைக் குறித்த கல்வியாளர்களின் குற்றப்பத்திரிகையும்வெளிப்படுத்தி காட்டியிருப்பதும் தான் படத்தின் வலுவான விஷயமாக இருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வணிக பள்ளியின் தற்போதைய தலைவர்க்ளீன் ஹப்பர்டு படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக வருகிறார். புஷ் நிர்வாகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்துபணக்காரர்களுக்கு 2003 வரி வெட்டுக்களை வடிவமைத்ததில் இவர் கருவியாக இருந்தார். மெட்லைஃப்பின் பொதுக்குழுவில் இடம் பெற்றிருக்கும் இவர்முன்னர் Capmarkஇன் பொதுக்குழுவில் இருந்தார். தயாரிப்பு குறிப்புகளின்படிஅவர் நிதியியல் சேவைகளின் நெறிமுறைகளைத் தளர்த்துவதில் முக்கிய ஆலோசகராக இருக்கிறார்.



No comments:

Post a Comment