Friday 27 April 2018

சான்பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழா 2010 : சத்யஜித்ரேயின் தலைசிறந்த இந்திய படைப்பு

Joanne Laurier 

 சத்யஜித்ரேயின் ஜல்சாகர்
சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் பிரபல இந்திய திரைப்பட இயக்குனரான சத்யஜித் ரேயின் படைப்பு திரையிடப்பட்டிருந்தது. முன்னதாகஅவருடைய முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி 1957ஆம் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில்ரேயின் திரைப்படங்கள் காட்டப்பட்ட அளவிற்கு வேறெந்த இயக்குனரின் திரைப்படங்களும் காட்டப்படவில்லை. 1992ல்அவரை கௌரவிக்கும் வகையில் இயக்குனர் பிரிவில் வாழ்நாள் முழுமைக்குமான அகிரா குரோசவா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு கலாச்சார பாதிப்புகளைக் கொண்டிருக்கும் சத்யஜித்ரேயின் சினிமா, 1950களின் மத்தியில் வெளியான வியாபார நோக்குடைய இந்தி சினிமாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இந்தியாவின் "தேசிய" திரைப்பட பாணியானகற்பனைகளும்பாலிவுட்டின் ஆடல்-பாடலுடனும் கூடிய சினிமாத்தனத்திலிருந்து ரேயின் திரைப்பட பாணி மாற்று பாரம்பரியத்தையும்திரைப்பட இயக்கத்தில் ஓர் ஆழமான யதார்த்த வலியையும் கொண்டிருந்தது. ரேயின் திரைப்படங்கள் ஆழ்ந்த உலகளாவிய விஷயங்களை வெளிப்படுத்தின.

இசை அரங்கம்

ரேயின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்சாகர் (1958) [இசை அரங்கம்]இந்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. முக்கிய திரைப்படங்களைப் பாதுகாப்பதற்காகவும்பழுதடைந்தவைகளைச் சரிசெய்வதற்காகவும் 1990இல் இயக்குனர் மார்டின் ஸ்கோர்சிஸினாலும்ஏனையவர்களாலும் அமைக்கப்பட்ட திரைப்பட அமைப்பின் நிதியுதவி உடன்ஜல்சாகர் திரைப்படம் அகாடமி திரைப்பட ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. (மிகப் பொருத்தமாகரேனுவாவின் The River திரைப்படமும் அந்த அமைப்பின் திட்டங்களில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு திரைப்படமாகும்.) திரைப்பட அமைப்பின் கருத்துப்படி, "ரேயின் திரைப்படம் அகாடமி திரைப்பட ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்ட போதுமிகவும் சேதமடைந்து நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. அதனை முழுமையாக கொண்டு வருவதென்பது ஓர் அசாதாரணமான நிலையில் இருக்கிறது."

வங்காள எழுத்தாளரான தாராஷங்கர் பானர்ஜியின் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் குறித்து ரே குறிப்பிட்டதாவது: "அது இசையால் அழகுபடுத்தப்பட்டஅழுகிப்போன பிரபுத்துவ சமுதாயத்தின் கதை."

1930களில் வங்காளத்தில் (வடகிழக்கு இந்தியாவில்)ஹூஜூர் பிஸ்வம்பார் ராய் (சஹாபி பிஸ்வாஸ்) என்பவர் இறுதியாக இருந்த ஜமீன்தார்களில் ஒருவராக இருக்கிறார். உண்மையில், 19ஆம் நூற்றாண்டில் செழுமைப்படுத்திய பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் தொன்றுதொட்டு இருந்து வந்த வரி-சேகரிப்பாளர்கள் நிலச்சுவான்தாரர்களாக உருவாக்கப்பட்டார்கள்.

ஆற்றில் உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருப்பதைஅந்த ஜமீன்தார் தம்முடைய பாழடைந்து போன மாளிகையின் மாடியிலிருந்து பார்க்கிறார். பின்னர் கம்பீரமாக ஒரு சாய்வு நாற்காலியில் சாய்கிறார். "என்ன மாதம் இது?" ராய் எவ்வித சலனமும் இல்லாமல் அவருடைய வேலையாட்களில் ஒருவரிடம் கேட்கிறார். தம் முதலாளியின் குழப்பமான மனநிலையை அந்த வேலையாள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். அந்த நிலச்சுவான்தார் யதார்த்தத்திலிருந்து எந்தளவிற்கு விலகிச் சென்று, "காலங்கடந்து" இருக்கிறார் என்பதை இந்த கேள்வி குறிப்பிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.

அவருடைய பிரபுத்துவ இரத்தத்தில் ஒருகாலத்தில் அவரைத் தூக்கி நிறுத்தி இருந்தகௌரவம் இன்னும் அவரிடம் சிறிது இருந்தது. பழம்பெருமைகளையும்பெருமித கற்பனைகளையும் அவர் கொண்டிருந்தார். ஆனால்அவருடைய பணம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது. உடன் குடியிருக்கும் அவருக்கு மிக நெருக்கமான ஒருவனும்வஞ்சமாக பணம் சேர்க்கும் ஒரு கீழ்-ஜாதி அற்பனுமான மாஹிம் கங்குலிஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய சொத்துக்களைக் கைப்பற்றுகிறான். தமக்கு புதிய வீடுமின்சாரம்கார் போன்றவற்றை பெறும் அளவிற்கு கங்குலி சொத்து வைத்திருக்கிறான். ஆனால் ராயினால்அவர் முன்னர் பேணி வளர்த்த வயதாகி போன குதிரையையும்யானையையும் மட்டும்தான் கட்டிக்காப்பாற்ற முடிகிறது.
ராய்இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக அவருடைய இசை அரங்கம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிரமாண்டம்மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சரவிளக்குகள் மற்றும் தூண்கள் (சாயம் போயிருந்தன) ஆகியவை அந்த பழைய பிரமாண்டத்தின் சாயல்களாக இருந்தன. அவருடைய மகனுக்கு இசை கற்று கொடுப்பதற்கான முதல் நாளில்பிரபலமான இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்ததை ராய் நினைவு கூர்கிறார். அது செல்வசெழிப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால் அந்த ஏற்பாடுகள் எல்லாம் அவருடைய மனைவியின் நகைகளை ஈடு வைத்து செய்யப்பட்டவை.

அடுத்த காட்சி புயலடிக்கும் ஓர் இரவில் நடக்கிறது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதுஅவருடைய கோப்பையில் ஒரு பூச்சி சிக்கி விடுகிறது. அவர் இதையொரு அபச சகுனமாக பார்க்கிறார். இதற்கிடையில்வெளியே சென்றிருந்த அவருடைய மகனையும்மனைவியையும் இந்த நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட நேரத்தில் திரும்பும்படி அவர் கட்டளையிட்டிருந்த நிலையில்அவர்கள் புயலில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இசை அரங்கம் பூட்டப்படுகிறது. வயதான பிரபு மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்.

நீண்டகாலத்திற்குப் பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பும் ராய்கங்குலியுடன் போட்டியிடவும்அந்தந்த "இரத்தத்திற்கே" அது-அது உரியது என்பதை நிரூபிப்பதற்கும் மீண்டும் களத்தில் இறங்குகிறார். கடைசியாக ஒரு இசை நிகழ்ச்சிக்காக அவர் மிச்சமிருக்கும் தம்முடைய ஆதாரவளங்களை எல்லாம் செலவழிக்கிறார். அவருடைய மூதாதையர்களின் ஓவியங்களைப் புகழுகையில்வரையப்பட்ட அவருடைய சொந்த படத்தின் மீது ஒரு சிலந்தி ஊர்வதைக் கவனிக்கிறார். அவருடைய வீட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் கூட மதிப்பதில்லை. இந்த கொடுமையான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் இருக்கிறது.

ஜல்சாகர் ஒரு நேர்த்தியான திரைப்படம். அதிலிருக்கும் சோகமான தொனிஒரு சமுதாய காலக்கட்டத்தின் மரண வேதனைகளை எடுத்துக்காட்டுகிறது. கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஹாபி பிஸ்வாஸின் சிறந்த நடிப்பைச் சுற்றி ஒன்று கலந்திருக்கும் ஓவியங்கள் வரலாற்று நனவுடன் தங்கியிருக்கின்றன. (வங்காளத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிஸ்வாஸ் [1900-1962] ஒரு வாகன விபத்தில் இறந்த பின்னர்உயர்ந்த தொழில்திறமைக்கு சொந்தக்காரர் என்று ஒரேயொரு நடுத்தர வயதுடைய நபரைக் கூட தம்மால் குறிப்பிட்டு எழுத முடியவில்லை என்று ரே குறிப்பிட்டார்.)
சினிமா எப்போதாவது தான் இதுபோன்ற தலைச்சிறந்த உயர்ந்த கலையையும்அரசியலையும் ஒன்று சேர்த்து பெறுகிறது. இசை சார்ந்த இடைக்காட்சிகள் வரும் போதுபடத்தின் சுவை நுணுக்கமாகவும்இதமாகவும் அளிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதி காட்சியில் இந்திய பாரம்பரிய நடன கலைஞரான ரோஷன் குமாரினியால் நிகழ்த்தப்படும் நடனக்காட்சியை எவ்வளவு விவரித்தாலும் மிகையாகாது. சலங்கையின் ஸ்ருதிக்கு ஏற்ப குமாரியின் முக பாவங்களும்நளினங்களும் கதக் நடனத்தைப் பற்றி ஒரு கதையையே கற்றுக் கொடுக்கின்றன. (கதக் என்பது "ஒரு கதையைச் சொல்பவர்" என்பதைக் குறிக்கும் சொல்.) இந்த அற்புதமான நடனத்தை யூ-டியூப்பில் காணலாம்.

இந்த படத்தில் ராய் கதாபாத்திரம் மிகவும் சிக்கலாகவும்சிறப்பாகவும் கையாளப்பட்டிருக்கிறது. அவர் தாமே ஒரு பழஞ்சின்னமாகபல காட்சிகளில் பரிதாபத்திற்குரியவராக தெரிகிறார். அவருடைய தலைவிதி தனிப்பட்ட சோகம் இல்லைஅது தவிர்க்க முடியாத ஒரு சமூக நிகழ்வுப்போக்கின் விளைவாக இருக்கிறது.

பழைய ஆளும் வர்க்கங்களின் காலம் முடியும்போதுஎப்போதுமே அதன் ஈர்ப்பானகவர்ச்சிகரமானவலி நிறைந்த பக்கத்தைக் கொண்டிருக்கிறது. இசை மீது அந்த நிலச்சுவான்தார் கொண்டிருக்கும் ஈர்ப்பு வெறுமனே போலியானதல்ல. மேலும் இந்த படம் ஒரு கேள்வியையும் முன்நிறுத்துகிறதுஒருவேளை கவனக் குறைவாக இருக்கலாம் - அதாவதுபுதிய முதலாளித்துவ மேற்தட்டும் கலையின் மீது இதே உணர்வுகளை கொண்டிருக்குமாராயின் முடிவு ஷேக்ஸ்பியரின் தொனியைக் கொண்டிருக்கிறது. அது ஹேம்லெட்டில் இருக்கும் அரசர் பிளேயரின் வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது: "நம்முடைய விருப்பங்களும்தலைவிதிகளும் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன/ நம்முடைய புலன்கள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன,/ நம்முடைய எண்ணங்கள் தான் நம்முடையதாக இருக்கின்றனஆனால் அவற்றின் முடிவு நம்முடைய கைகளில் இல்லை."

No comments:

Post a Comment